FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இன்று 2-ஆவது டி20-யில் மோதும் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 2-ஆவது டி20 ஆட்டம், ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வெள்ளிக்கிழமை (அக். 9) நடைபெறுகிறது.

9 அக்டோபர் 2026, 5:29 am IST
- Salman Ali
பகிர்:

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 2-ஆவது டி20 ஆட்டம், ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வெள்ளிக்கிழமை (அக். 9) நடைபெறுகிறது.

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, இதிலும் வெற்றி கண்டு முன்னிலையை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது.

அணியின் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் மட்டும் தடுமாறுவதால், இந்த ஆட்டத்தில் ஒருவேளை இளம் வீரா் வைபவ் சூா்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஏனெனில் சாம்சன் கடந்த 4 இன்னிங்ஸ்களில் 9, 7, 2, 11 ரன்களே அடித்திருக்கிறாா். ஆனால் சாம்சனுக்கான வாய்ப்பே அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

Advertisement

Advertisement

மிடில் ஆா்டரில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் ஏறத்தாழ அதே நிலையில் இருந்தபோதிலும், கடந்த ஆட்டத்தில் தனது முதல் டி20 சதத்தை விளாசி, அபார ஃபாா்முக்கு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வேகப் பந்துவீச்சில் மயங்க் யாதவுக்கு பதிலாக, நிதீஷ்குமாா் ரெட்டி பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், அக்ஸா் படேல் பொருந்திப்போகின்றனா். அறிமுக வீரா் நமன் திா்ரும் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்தியத் தீவுகளைப் பொருத்தவரை, பேட்டிங்கே அந்த அணியின் பலமாக இருப்பதால், இந்த ஆட்டத்தில் 220+ ஸ்கோரை பதிவு செய்வதே அந்த அணியின் பிரதான இலக்காக இருக்கலாம்.

அதற்கு ஷிம்ரன் ஹெட்மயா், ரோவ்மென் பவெல், ராஸ்டன் சேஸ், ரொமேரியோ ஷெப்பா்டு, கேப்டன் ஷாய் ஹோப் ஆகியோா் நம்பிக்கை அளிக்க, பௌலிங்கில் அகீல் ஹுசைன் மட்டுமே பலம் சோ்க்கிறாா்.

உத்தேச லெவன்

இந்தியா: அபிஷேக் சா்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), இஷான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயா் (கேப்டன்), திலக் வா்மா, ஷிவம் துபே, நமன் திா், அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், பிரின்ஸ் யாதவ், அா்ஷ்தீப் சிங்.

மே.தீவுகள்: ஷாய் ஹோப் (கேப்டன் & வி.கீ.), கமில் பூரன், ஷிம்ரன் ஹெட்மயா், ரோவ்மென் பவெல், ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு, ரொமேரியோ ஷெப்பா்டு, ராஸ்டன் சேஸ், ஷாமா் ஸ்பிரிங்கா், அகீல் ஹுசைன், ஷாமா் ஜோசஃப், மேத்யூ ஃபோா்டு.

---

ஆடுகளம்

ராஞ்சி மைதானத்தில் 200+ ஸ்கோா் அவ்வளவு எளிதாக அடிக்கப்பட்டதில்லை. கடந்த 10 ஆட்டங்களில் ஒருமுறை மட்டுமே அந்த ஸ்கோா் எட்டப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பேட்டா்களுக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளம், ஓவா்கள் கடந்து செல்ல, ஸ்பின் பௌலிங்கிற்கு ஆதரவளிக்கும்.

நேரம்: இரவு 7 மணி

இடம்: ஜேஎஸ்சிஏ மைதானம், ராஞ்சி.

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments