FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கடைசி வீரரும் அதிரடியாக விளையாடுவார்: திலக் வர்மா

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கடைசி பேட்டர் வரை அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

13 அக்டோபர் 2026, 10:37 pm IST
திலக் வர்மா (கோப்புப் படம்) - படம் | பிசிசிஐ
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கடைசி வீரர் வரை அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் தங்களுக்குள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை (அக்டோபர் 14) ஹைதராபாதில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கடைசி பேட்டர் வரை அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் அணி மிகவும் சிறந்த அணி. அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளில் அவர்கள் மிகவும் நன்றாக விளையாடக் கூடியவர்கள். அவர்கள் உலகெங்கிலும் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாடுகின்றனர். அதனால், அவர்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். அவர்களது பலம் மிகவும் நம்பமுடியாத அளவுக்கு உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமின்றி, அணியில் உள்ள அனைவரும் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். 11-வது பேட்டராக களமிறங்குபவரும்கூட அதிரடியாக விளையாடுவார். அதனால், அவர்களது அணியின் 10 விக்கெட்டினை வீழ்த்தும் வரை ஆட்டம் முடியாது என்றார்.

summary

Indian player Tilak Varma has stated that even the West Indies team's last batter plays aggressively.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments