FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திலக் வர்மா, நிதீஷ் குமார் அதிரடி..! 19.5ஆவது ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வென்ற இந்திய அணி குறித்து...

நிதீஷ் குமார் - திலக் வர்மா - படம்: பிசிசிஐ
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 19.5 ஓவரில் 181/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 180/5 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக நியூசிலாந்து அணியில் க்ளென் பிலிப்ஸ் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் பெவோன் ஜேக்க்பஸ் 58 ரன்கள் குவித்தார்.

Advertisement

Advertisement

அடுத்து விளையாடிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 181/6 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 51* ரன்கள் (26 பந்துகளில்) குவித்தார். நமன் திர் 31 (17 பந்துகளில்), நிதீஷ் குமார் ரெட்டி 26* ரன்கள் (13 பந்துகளில்) எடுத்து வெற்றிக்கு உதவினார்கள்.

நியூசிலாந்து சார்பில் பந்துவீச்சில் கேப்டன் மிட்செல் சான்ட்னர் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இருப்பினும் அவரது போராட்டம் இறுதியில் வீண் ஆனது. அரைசதம் அடித்த திலக் வர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

summary

India's thrilling win in the 19.5th over thanks to Tilak Varma's action!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments