வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை: திலக் வர்மா
வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாட வேண்டும் என ஒருபோதும் கனவிலும் நினைக்கவில்லை என இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாட வேண்டும் என ஒருபோதும் கனவிலும் நினைக்கவில்லை என இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான திலக் வர்மா தற்போது துலீப் டிராபியில் சௌத் ஸோன் அணியைக் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலான சௌத் ஸோன் அணி அரையிறுதிப் போட்டியில் நார்த் ஸோன் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நார்த் ஸோன் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா, முதல் இன்னிங்ஸில் சதம் விளாசியும், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் விளாசியும் அசத்தினார். அவர் முதல் இன்னிங்ஸில் 116* ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 51* ரன்களும் எடுத்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாட வேண்டும் என ஒருபோதும் கனவிலும் நினைக்கவில்லை என இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனக்கு எப்போதும் சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாடுவதுதான் பிடிக்கும். இந்திய அணிக்காக வெள்ளைப் பந்துப் போட்டிகளில் (டி20, ஒருநாள்) விளையாடுவேன் என ஒருபோதும் கனவிலும் நினைத்ததில்லை. ஆனால், அது கடவுளுடைய திட்டம். நான் இந்திய அணிக்காக டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறேன். ஆனால், இந்திய அணிக்காக நான் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
நான் என்னுடைய 10 வயதிலிருந்து மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறேன். அதனை யாரும் பார்க்கவில்லை. 10 வயதில் தொடங்கிய என்னுடைய கடின உழைப்பு தற்போது 23 வயதிலும் தொடர்கிறது. ஐபிஎல் தொடரின் மூலம் வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாட தேர்வானேன். ஆனால், அதற்கு முன்பாக நான் நிறைய சிவப்புப் பந்துப் போட்டிகளில் விளையாடியுள்ளேன். அதனால், என்னுடைய பலம் டெஸ்ட் கிரிக்கெட்தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன் என்றார்.
23 வயதாகும் திலக் வர்மா இந்திய அணிக்காக 53 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Indian player Tilak Varma has stated that he never even dreamed of playing white-ball matches.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.