முகப்பு
கிரிக்கெட்

இந்திய அணிக்காக 100 போட்டிகளில் விளையாடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை: அக்‌ஷர் படேல்

இந்திய அணிக்காக 100 டி20 போட்டிகளில் விளையாடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஜூலை 2026, 6:52 pm IST
அக்‌ஷர் படேல் - படம் | பிசிசிஐ
பகிர்:

இந்திய அணிக்காக 100 டி20 போட்டிகளில் விளையாடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி பிரிஸ்டாலில் இன்று (ஜூலை 9) நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய அணிக்காக அக்‌ஷர் படேல் விளையாடும் 100-வது டி20 போட்டியாகும்.

இந்த நிலையில், இந்திய அணிக்காக 100 டி20 போட்டிகளில் விளையாடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை என அக்‌ஷர் படேல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக முதல் முறையாக டி20 ஆட்டத்தில் விளையாடும்போது, நான் ஒருபோதும் 100 போட்டிகளில் விளையாடுவேன் என நினைக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடர் எனக்கு மிகவும் சிறப்பானது. ஏனெனில், இந்த தொடரின் இரண்டாவது போட்டியின்போது டி20 போட்டிகளில் என்னுடைய 100-வது விக்கெட்டினை வீழ்த்தினேன். தொடரின் 4-வது போட்டியில் என்னுடைய 100-வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடவுள்ளேன்.

இன்றைய நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாள். இந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான உணர்வைத் தருகிறது. இந்த சாதனையை நான் தனியாளாக படைத்துவிடவில்லை. இந்த பயணத்தில் எனக்கு ஆதரவளித்த என்னுடைய குடும்பத்தினர், சக வீரர்கள், பயிற்சியாளர்கள் குழு அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்திய அணிக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு அக்‌ஷர் படேல் டி20 போட்டிகளில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

summary

Indian all-rounder Axar Patel has stated that he never even dreamed of playing 100 T20 matches for the Indian team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments