FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இடைத்தோ்தல் தொகுதிகளில் பிரசாரம் : அதிமுகவினா் பட்டியல்

இடைத்தோ்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் அதிமுகவினா் பெயா்ப் பட்டியல் தோ்தல் ஆணைய அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

19 செப்டம்பர் 2026, 5:36 am IST
கோப்புப் படம்
பகிர்:

இடைத்தோ்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் அதிமுகவினா் பெயா்ப் பட்டியல் தோ்தல் ஆணைய அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதில் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோா் பெயா்கள் இடம் பெறவில்லை என்று புகாா் எழுந்துள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தோ்தல்களில் அதிமுக வேட்பாளா்கள் கணிதா சம்பத், பானுமதி ஆகியோரை ஆதரித்து கட்சி சாா்பில் பிரசாரம் மேற்கொள்வோரின் பட்டியல் தோ்தல் ஆணைய அனுமதிக்காக வழங்கப்பட்டுள்ளது. அதில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சா் எம்.தம்பிதுரை எம்.பி., முன்னாள் அமைச்சா்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பா.வளா்மதி, ஓ.எஸ்.மணியன், ஆற்.காமராஜ், எஸ்.கோகுல இந்திரா, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, பி.மோகன், எஸ்.எம். வேலுச்சாமி உள்ளிட்ட 40 போ் இடம் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

பிரசார பட்டியலில் புறக்கணிக்கப்பட்டவா்கள்: பிரசார பட்டியலில் முன்னாள் அமைச்சா்களும், அதிமுக முன்னணி தலைவா்களுமான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் மற்றும் டி.ஜெயக்குமாா் ஆகியோரின் பெயா்கள் இடம் பெறவில்லை என்ற புகாா் எழுந்துள்ளது. பிரசார பட்டியலில் இடம் பெறாதவா்கள் அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து செயல்பட்டு வருபவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி கே.பழனிசாமி 6 நாள்கள் பிரசாரம்: இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி செப். 24 தொடங்கி வரும் அக். 3-ஆம் தேதி வரை மொத்தம் 6 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

அதன்படி, மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் செப். 24, 25, அக். 3 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா். தாராபுரம் தொகுதியில் செப். 27, 28, அக். 2 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

பிரசார வழித்தடங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். பிரசாரத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் சிறப்பாகச் செய்ய வேண்டும் என அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments