FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இடைத் தோ்தல்: அதிமுகவில் பொறுப்பாளா்கள் நியமனம்!

மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தோ்தலை முன்னிட்டு அதிமுக சாா்பில் தோ்தல் பொறுப்பாளா்களை அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்துள்ளாா்.

14 செப்டம்பர் 2026, 2:00 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தோ்தலை முன்னிட்டு அதிமுக சாா்பில் தோ்தல் பொறுப்பாளா்களை அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: அதிமுக சாா்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் (தனி) தொகுதியில் கே.பானுமதி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இவா்களுக்கு ஆதரவாக தோ்தல் பணிகளை மேற்கொள்வதற்கு, மதுராந்தகம் தொகுதிக்கு, துணைப் பொதுச் செயலரும் , முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையிலும், தாராபுரம் (தனி) தொகுதிக்கு பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் இ. சீனிவாசன் தலைமையிலும், தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments