a‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் கைது’: பிலிப்பின்ஸ் மக்களுக்கு அதிபர் எச்சரிக்கை 
உலகம்

‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் கைது’: பிலிப்பின்ஸ் மக்களுக்கு அதிபர் எச்சரிக்கை

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிலிப்பின்ஸ் நாட்டு மக்களுக்கு அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிலிப்பின்ஸ் நாட்டு மக்களுக்கு அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. 

இந்நிலையில் பிலிப்பின்ஸில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தயாராக இல்லாத பொதுமக்கள் கைது செய்யப்படுவர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

இதுதொடர்பாக திங்கள்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே,“நாட்டில் ஒரு நெருக்கடி நிலை நிலவுகிறது. தேசிய அவசரநிலை உள்ள நிலையில் நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், நான் உங்களை கைது செய்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “தடுப்பூசி போட நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், பிலிப்பின்ஸை விட்டு வெளியேறுங்கள்” என்று அவர் கூறினார். 

பிலிப்பின்ஸில் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும்பணி கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT