ஹாங்காங்கில் புயல் பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து: 30 படகுகள் சேதம்
ஹாங்காங்கில் புயல் பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தில் 30 படகுகள் சேதமடைந்தன.
உலகம்ஹாங்காங்கில் புயல் பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து: 30 படகுகள் சேதம்
ஹாங்காங்கில் புயல் பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தில் 30 படகுகள் சேதமடைந்தன.
ஹாங்காங்கில் புயல் பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தில் 30 படகுகள் சேதமடைந்தன.
ஹாங்காங்கின் அபர்தீன் பகுதியில் புயல் பாதுகாப்பு மையத்தில் நிறுத்தி வைத்திவைக்கப்பட்டிருந்த படகுகளில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் படகுகள், விமானங்கள் மூலம் சுமார் 6 மணிநேரத்துக்கு மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் 30 படகுகள் தீயில் கருகின. அதில் 10 படகுகள் தண்ணீரில் மூழ்கின. 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
எனினும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.