கோப்புப்படம் 
உலகம்

நேபாளத்தில் 9 ஆயிரத்தை எட்டிய கரோனா பலி 

நேபாளத்தில் கரோனா பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டியுள்ளது. 

DIN

நேபாளத்தில் கரோனா பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டியுள்ளது. 
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,353 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,33,679ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 34 பேர் பலியானார்கள். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 40,336 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 367 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 3,333,921 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 
அதில், 2,583,790 பேருக்கு முதல் தவணையும், 750,131 பேருக்கு இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (24.11.2025)

கரூர் சம்பவம்: சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வி..! சோகத்தில் ரசிகர்கள்!

ரஜினி 173 - இயக்குநரும் கதையும்?

அழகென்ற சொல்லுக்கு... மஹானா சஞ்ஜீவி!

SCROLL FOR NEXT