'ஒசாமாவை தியாகி என்று இம்ரான் கான் வாய்தவறி சொல்லிவிட்டார்' 
உலகம்

'ஒசாமாவை தியாகி என்று இம்ரான் கான் வாய்தவறி சொல்லிவிட்டார்'

ஒசாமாவை தியாகி என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாய்தவறி சொல்லிவிட்டதாக, அந்நாட்டு தகவல்துறை அமைச்சர் ஒரு ஆண்டுக்குப் பின் விளக்கம் கொடுத்துள்ளார்.

PTI

இஸ்லாமாபாத்: ஒசாமாவை தியாகி என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாய்தவறி சொல்லிவிட்டதாக, அந்நாட்டு தகவல்துறை அமைச்சர் ஒரு ஆண்டுக்குப் பின் விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான், அமெரிக்கப் படைகள், எங்களது அனுமதியின்று நாட்டுக்கள் நுழைந்து பின் லேடனை சுட்டுக் கொன்றது, அது முதல், பலரும் எங்கள் நாட்டை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார். அந்தப் பேச்சின் போது, ஒசாமா பின் லேடன் ஒரு தியாகி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இம்ரான் கானின் சர்ச்சைப் பேச்சு குறித்து அமைச்சர் சுமார் ஓராண்டுக்குப் பின் விளக்கம் அளிக்கையில், அவர் வாய்தவறி அவ்வாறு சொல்லிவிட்டார். அதற்கு அவரே விளக்கமும் சொல்லிவிட்டார் என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒசாமாவை பயங்கரவாதி என்று குறிப்பிட்டபோது, பத்திரிகையாளர் ஒருவர், பாகிஸ்தான் பிரதமரோ ஒசாமாவை தியாகி என்கிறாரே என்று கேள்வி எழுப்பியதன் மூலம் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT