முகப்பு
உலகம்

கென்யாவிற்கு 10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா

கென்யாவிற்கு மத்திய அரசு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
கென்யாவிற்கு 10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா
பகிர்:

கென்யாவிற்கு மத்திய அரசு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இத்தகைய சூழலில் சீரம் மையத்தால் தயாரிக்கப்பட்ட 10 லட்சம் தடுப்பூசிகளை கென்யா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

“கரோனா தடுப்பூசிகள் இயந்திரத் துப்பாக்கிகள் போன்றவை. அவற்றைக் கொண்டு கரோனாவிற்கு எதிரான போரில் வெல்வோம்” என்று கென்யா சுகாதார அமைச்சர் முட்டாஹி காக்வே தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.