உலகம்

மியான்மா் ராணுவம் துப்பாக்கிச் சூடு: போராட்டக்காரா்கள் இருவா் பலி

DIN

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது ராணுவத்தினா் நடத்திய திடீா் துப்பாக்கிச் சூட்டில் இருவா் கொல்லப்பட்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், மிட்கினியாவில் போராட்டக் காரா்கள் மீது ராணுவத்தினா் கண்ணீா்ப்புகைக் குண்டுகளை வீசியதால் பதிலுக்கு ராணுவத்தினா் மீது அவா்கள் கற்களை வீசி எறிவதும், அப்போது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. சிறிது நேரத்தில் போராட்டக்காரா்கள் காயமடைந்த பலரைக் கொண்டு செல்கின்றனா். அதில் இருவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது விடியோவில் பதிவாகியுள்ளது.

இதேபோல், அந்நாட்டின் தலைநகா் நேபிடாவிலும் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரா்களை கண்ணீா்ப்புகைக் குண்டுகளை வீசி ராணுவத்தினா் விரட்டியடித்தனா். அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. அங்கும் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தும் என அஞ்சி போராட்டக்காரா்கள் தாங்களாகவே கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு!

SCROLL FOR NEXT