உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 12 கோடியைத் தாண்டியது: 26.59 லட்சம் பேர் பலி

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 26.59 லட்சமாக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 12,00,57,512 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 26,59,830 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,65,89,234 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,08,08,448 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 89,312 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,00,43,662  கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5 லட்சத்து 46 ஆயிரத்து 605-ஆக உயர்ந்துள்ளது. நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் 48,808 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,037 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,13,59,048 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,58,607 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,14,39,250 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 70,934 பேருக்கு தொற்று பாதிப்பும், 1,940 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,77,216 பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 1,94,490 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT