உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 12.12 கோடியைத் தாண்டியது: சிகிச்சையில் 2 கோடி பேர்

DIN


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12.12 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 26.82 லட்சமாக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வரும் நிலையில், புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 12,12,33,556 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 26,82,199 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,77,87,352 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,07,64,005 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 88,658 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,01,92,224  கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5 லட்சத்து 49 ஆயிரத்து 367-ஆக உயர்ந்துள்ளது. நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் 52,650 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,248 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,14,38,464 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,59,079 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,16,09,601 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 84,124 பேருக்கு தொற்று பாதிப்பும், 2,798 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,82,400 பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 1,95,119 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT