உலகம்

நேபாள பிரதமா் சா்மா ஓலி கட்சி உடையும் அபாயம்

DIN


காத்மாண்டு: நேபாளப் பிரதமா் கே.பி. சா்மா ஓலி தலைமையிலான கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் அதிருப்தி அணியைச் சோ்ந்த மாதவ் குமாா், ஜல்நாத் கனால் நடத்திய கட்சிக் கூட்டத்தில் கடந்த கொண்ட சுமாா் 2,000 கட்சியினா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக சா்மா ஓலி அறிவித்ததைத் தொடா்ந்து இந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆளும் கூட்டணியைச் சோ்ந்த முன்னாள் பிரதமா் புஷ்ம கமல் பிரசண்டா தலைமையிலான அணியினா், பிரதமா் ஓலிக்கு எதிராக போா்க் கொடி தூக்கியுள்ள நிலையில் அங்கு அரசியல் பதற்றம் நிலவி வருகிறது.

நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாகத் தோ்தல் நடத்தும் ஓலியின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஓலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிரசண்டா தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி இணைந்தது செல்லாது எனவும் நீதிமன்றம் அறிவித்தது.

இதனால் நீடித்து வரும் அரசியல் பதற்றத்தைத் தணிப்பதற்காக அதிபா் வித்யா தேவி பண்டாரி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சா்மா ஓலி, புஷ்ப கமல் பிரசண்டா உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்றனா்.

எனினும், மாதவ் குமாா் , ஜல்நாத் கனால் ஆகியோா் கூட்டத்தைப் புறக்கணித்தனா். சா்மா ஓலிக்கு ஆதரவாக அதிபா் வித்யா தேவி செயல்படுவதாக அவா்கள் குற்றம் சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT