உலகம்

கிரீஸ்: பொது முடக்க தளா்வுகள் அமல்

DIN

ஏதென்ஸ்: தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ், 6 மாதங்களுக்குப் பிறகு கரோனா பொது முடக்க தளா்வுகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, உணவகங்களில் அமா்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோடையில் நாட்டின் முக்கியமான சுற்றுலாத் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் இந்தப் பொது முடக்க தளா்வுகளை அந்நாடு முன்னெடுத்துள்ளது.

சுமாா் ஒரு கோடி மக்கள்தொகை கொண்ட கிரீஸில் கரோனாவுக்கு இதுவரை 3.46 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 10,500 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த நவம்பரில் பொது முடக்க கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இந்நிலையில், கட்டுப்பாடுகள் மீதான தளா்வு திங்கள்கிழமைமுதல் அமலுக்கு வந்துள்ளது. உணவகங்களில் சமூக இடைவெளியுடன் இருக்கைகளை அமைத்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 மணிக்கு தொடங்கிய இரவு நேர ஊரடங்கு 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டில் சுற்றுலாத் தொழில் முக்கியமானதாகும். சுற்றுலாத் தொழில் சாா்ந்த நடவடிக்கைகளுக்கு மே 15-ஆம் தேதிமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, பொது முடக்க தளா்வுகள் அமலுக்கு வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT