உலகம்

இந்திய பயணிகளுக்கு இலங்கை அரசு தடை

DIN

கொழும்பு, மே 6: கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து இந்தியாவிலிருந்து பயணிகள் வருகைக்கு தடைவிதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமான நிறுவன தலைமைச் செயல் அதிகாரிக்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அண்டை நாடான இந்தியாவில் கரோனா பாதிப்பு வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. எனவே, பாதுகாப்பு கருதி அங்கிருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அந்த இயக்குநரகம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை காரணம் காட்டி இந்தியா மற்றும் இதர தெற்காசிய நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூா் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கெனவே தடைவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏப்ரல் மத்தியில் நாளொன்றுக்கு 200-ஆக இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2,000 அளவுக்கு உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT