ரஷியாவில் ஒரேநாளில் 8,386 பேருக்கு கரோனா பாதிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,386 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,386 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 8,386 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 48,63,5149 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 360 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,12,622 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் ஒரேநாளில் 2,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்று பாதித்த 4,480,3608 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.