உலகம்

இரண்டு கருந்திமிங்கிலங்கள் தழுவிக்கொள்ளும் காட்சி (விடியோ)

வடக்கு அட்லாண்டிக் கடலில் ஆபத்தான வகையைச்சேர்ந்த இரண்டு கருந் திமிங்கிலங்கள் தழுவிக்கொள்ளும் காட்சி படமெடுக்கப்பட்டுள்ளது. 

DIN

வடக்கு அட்லாண்டிக் கடலில் ஆபத்தான வகையைச்சேர்ந்த இரண்டு கருந் திமிங்கிலங்கள் தழுவிக்கொள்ளும் காட்சி படமெடுக்கப்பட்டுள்ளது. 

உட்ஸ் ஹோல் கடல்சார் நிறுவனம் மற்றும் நியூ இங்கிலாந்து அக்வாரியத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பிரையன் ஸ்கெர்ரி ட்ரோன் கேமரா மூலமாக இதனை காட்சிப்படுத்தியுள்ளார். இதில் கருந்திமிங்கிலங்கள் இரண்டும் நீச்சலுக்கு உதவும் தங்கள் துடுப்புகளைக் கொண்டு தழுவிக்கொள்கின்றன. 

இதுபோன்ற நிகழ்வுகளை மிகவும் அரிதாகவே காண முடியும் என்றும் கடலுக்கு வெளியே இரண்டு திமிங்கிலங்கள் தழுவிக்கொள்ளும் காட்சியை படம்பிடித்தது இதுவே முதல்முறையாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

மிகவும் ஆபத்தான விலங்குகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள வடக்கு அட்லாண்டிக் கருந் திமிங்கிலங்களின் மொத்த எண்ணிக்கை 360 என மதிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT