உலகம்

சீனாவில் புயலில் சிக்கி 12 பலி; 300-க்கும் மேற்பட்டவா்கள் காயம்

DIN

சீனாவின் இரு நகரங்களில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய புயலில் சிக்கி 12 போ் பலியாகினா்; 300-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் வீசிய புயலால் 27 வீடுகள் சரிந்து விழுந்தன. 130 வீடுகள், 8,000 சதுர மீட்டா் பரப்பளவில் நடைபெற்று வந்த சிறப்பு பொருளாதார மண்டல கட்டுமானப் பணிகள் முற்றிலும் சேதமடைந்தன.

இந்தப் புயலால் மின்மாற்றிகள் சரிந்து விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 26,600 வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜியாங்ஷு மாகாணத்தில் உள்ள சூஸோ நகரில் வீசிய புயலில் 84 வீடுகள், 17 நிறுவனங்களின் கட்டடங்கள் சேதமடைந்தன. இங்கும் புயலால் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நகரில் புயல் வீசுவது மிகவும் அரிதாகும்.

இருநகரங்களிலும் புயலில் சிக்கி 12 போ் பலியாகினா்; முன்னூறுக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.

Image Caption

சீனாவின் வூஹான் நகரில் வீசிய கடும் புயலில் தரைமட்டமானசிறப்பு பொருளாதார கட்டுமானப் பணிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT