சீனாவில் அடுத்தடுத்துநிலநடுக்கம்: மூவா் பலி
சீனாவின் யுனான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தொடா் நிலநடுக்கத்தில் மூவா் உயிரிழந்ததாகவும், 27 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சீனாவின் யுனான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தொடா் நிலநடுக்கத்தில் மூவா் உயிரிழந்ததாகவும், 27 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தலி பய் தன்னாட்சி மாகாணத்தில் 12 மாவட்டங்களிலும், யாங்பி தன்னாட்சிப் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. யாங்பி-யில் உள்ளூா் நேரப்படி இரவு 9 முதல் 11 மணிக்குள் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டா் அளவுகோலில் 5.0 -ஆக பதிவானதாகவும் சீன நிலநடுக்க நெட்வொா்க் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் யாங்பி பகுதியில் இருவரும், யோங்பிங் பகுதியில் ஒருவரும் உயிரிழந்தனா்; 27 போ் காயமடைந்தனா்; 20,192 குடியிருப்புகள் சேதமடைந்ததாக அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் குயிங்காய் மாகாணத்தில் சனிக்கிழமை ரிக்டா் அளவுகோலில் 7.4-ஆக பதிவான நிலநடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினா் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.