உலகம்

இலங்கை: ரயில், பேருந்துபோக்குவரத்துக்குத் தடை

DIN

இலங்கையில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் ரயில், பேருந்துப் போக்குவரத்துக்கு 4 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய இந்தத் தடை செவ்வாய்க்கிழமை காலை வரை அமலில் இருக்கும். அதேவேளையில், சுகாதாரம், உணவு, மின்சாரத் துறை, மருத்துவம் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு இத்தடை பொருந்தாது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரு வாரங்களுக்கு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என நாட்டின் மருத்துவ சங்கங்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. நாட்டில் கண்டறியப்பட்டுள்ள கரோனா தொற்றைவிட உண்மையான பாதிப்பு எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என மருத்துவ சங்கங்கள் தெரிவித்திருந்தன.

இலங்கையில் பொதுக்கூட்டங்கள், விருந்துகள், திருமணங்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் கூடுதல் நடவடிக்கையாக ரயில், பேருந்துப் போக்குவரத்து 4 நாள்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கரோனா மொத்த பாதிப்பு 1.54 லட்சமாக உள்ளது. 1089 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

SCROLL FOR NEXT