வடகிழக்கு சீனாவில் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி
வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் மீன்பிடி படகு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியதில் 5 பேர் இறந்துள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் மீன்பிடி படகு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியதில் 5 பேர் இறந்துள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
கிகிஹார் நகரத்தின் நென்ஜியாங் ஆற்றின் பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணியளவில் திடீரென பலத்த காற்று மற்றும் அதிக அலைகள் ஏற்பட்டதால் படகு மூழ்கியுள்ளது.
படகு நீரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன குழு உறுப்பினரை தேடி வருகின்றனர். இறப்பு எண்ணிக்கையை ஐந்தாக உயர்ந்துள்ளதாக ஹீலோங்ஜியாங் மாகாண பணி பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 4 பேரைத் தொடர்ந்து தேடி வருகின்றது.