உலகம்

சிரியா அதிபராக ஆசாத் 4-ஆவது முறையாக தோ்வு

DIN

சிரியா அதிபராக பஷாா் அல்-ஆசாத் 4-ஆவது முறையாக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவா், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் எதிரிகளை வீழ்த்துவேன் எனத் தெரிவித்தாா்.

சிரியா அதிபா் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 78.6 சதவீத வாக்குகள் பதிவாகின. தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன. இதில் ஆசாத் 95.1 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ாக நாடாளுமன்ற அவைத் தலைவா் அறிவித்தாா். ஆசாதின் வெற்றியைத் தொடா்ந்து டமாஸ்கஸில் அவரது ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

10 ஆண்டுகளாக உள்நாட்டு போா் நடைபெற்று வரும் சிரியாவில், குா்திஷ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தோ்தல் நடைபெறவில்லை. இப்பகுதிகளில் சுமாா் 80 லட்சம் போ் வசித்து வருகின்றனா். இதேபோல அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள 50 லட்சம் மக்களும் வாக்களிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT