கோப்புப்படம் 
உலகம்

ரஷியாவில் அதிகரிக்கும் கரோனா பலி: ஒரேநாளில் 1,190 பேர் உயிரிழப்பு

ரஷியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,190 பேர் உயிரிழந்துள்ளனர். 

DIN

ரஷியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,190 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதையடுத்து, ரஷியாவில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,48,004 ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர புதிதாக அங்கு 39,400 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 88,34,495-ஆக உயா்ந்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,982 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

நேற்று 25,582 உள்பட இதுவரை 75,87,560 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது 9,98,931 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ரஷியாவில் கரோனா பாதிப்பு மற்றும் பலி அதிகரித்து வரும் சூழலில், தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT