உலகம்

ரஷியாவில் மீண்டும் கரோனா பலி புதிய உச்சம்

ரஷியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது.

DIN

ரஷியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,211 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும். இத்துடன், 249,215 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 39,160 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 88,73,655-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரஷியாவில் இதுவரை 76,19,596 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 10,04,844 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 2,300 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இரு அறைகள் சேதம்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்: நயினாா் நாகேந்திரன்

பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 8 போ் காயம்

கல்லல் பகுதியில் அக்.14-இல் மின்தடை

குழந்தையை கொலை செய்த தந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT