கோப்புப்படம் 
உலகம்

ஐரோப்பிய நாடுகளில் கரோனா பலி விகிதம் 5% அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கரோனா பலி விகிதம் 5% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

DIN

ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கரோனா பலி விகிதம் 5% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,263 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 9,675,058-ஆக உயா்ந்துள்ளது. 

அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 201 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 143,360-ஆக உயா்ந்துள்ளது. 

பிரிட்டனில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருக்க வேண்டுமெனில் மக்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கரோனா பலி விகிதம் 5% அதிகரித்துள்ளதாகவும் கடந்த வாரத்தில் மட்டும் உலக அளவில் 50,000 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரிட்டன், ஜெர்மனி, ரஷியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

புதிய தொடரில் நடிக்கும் பாரதி கண்ணம்மா வினுஷா!

SCROLL FOR NEXT