’பேசாமல் உட்காருங்க’: பிரிட்டன் பிரதமரை அடக்கிய அவைத்தலைவர் 
உலகம்

’பேசாமல் உட்காருங்க’: பிரிட்டன் பிரதமரை அடக்கிய அவைத்தலைவர்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அவைக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சனை அவைத்தலைவர் லிண்ட்சே கண்டித்து அமர வைத்த விடியோ வைரலாகியுள்ளது.

DIN

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அவைக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சனை அவைத்தலைவர் லிண்ட்சே கண்டித்து அமர வைத்த விடியோ வைரலாகியுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதர வேலைகளில் ஈடுபடுவது குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அதற்கு பதிலாக எதிர்க் கேள்விகளை அவையில் எழுப்பினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பேசிய அவைத்தலைவர் லிண்ட்சே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அறிவுறுத்தினார்.

இவைகள் பிரதமருக்கான கேள்விகள் இல்லை என மறுத்த போரிஸ் ஜான்சன் அவையில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியவண்ணம் இருந்தார். இதனால் பொறுமையிழந்த அவைத்தலைவர் லிண்ட்சே, “பேசாமல் உட்காருங்கள். நீங்கள் இந்த நாட்டிற்கு பிரதமராக இருக்கலாம். ஆனால் இந்த அவைக்கு நான் தான் பொறுப்பு” என காட்டமாக கூறி அவரை அமரவைத்தார்.

பிரதமர் போரிஸ் ஜான்சனை அவைத்தலைவர் லிண்ட்சே கண்டித்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT