உலகம்

ஏமன்-சவுதி கூட்டுப்படைத் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் பலி

DIN

ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் நேற்று முந்தினம்(நவ.17)  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப்  மாகாணத்தில்  எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மரீப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர்  பதுங்கியிருந்து தொடர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதில் மரிப் மற்றும் அல்-பைதா மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய போது ஹவுதி அமைப்பைச் சேர்ந்த 130 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அவர்கள் பயன்படுத்திய 16 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் தகர்க்கப்பட்டதாகவும் கூட்டுப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து கூட்டுப்படையினர் தாக்குதலில் கடந்த ஒரு மாதத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 1200 பேர் வரை பலியாகியிருக்கிறார்கள்.

முன்னதாக கடந்த நவ.6 அன்று ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில்  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 145 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT