முகப்பு
உலகம்

பிரேசில்: 6.12 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 13,355 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை  2,20,03,317 ஆக அதிகரித்துள்ளது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:


பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 13,355 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,20,03,317 ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,355 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,20,03,317-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 226 போ் பலியாகினா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 6,12,370-ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 2,12,14,823 பேர் குணமடைந்துள்ளனர். 

உலகில் கரோனா தொற்றுக்கு அதிகயளவில் உயிரிழந்தவர்களில் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில்  உள்ளது. இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →