உலகம்

டிக்டாக் செயலிக்கான தடையை நீக்கியது பாகிஸ்தான்

DIN

சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆபாசமான விடியோக்களை பதிவிட்டதாகக் கூறி தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியின் பயன்பாட்டுக்கான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது.

ஆபாசமான விடியோக்களை பதிவேற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் டிக்டாக் செயலியை பாகிஸ்தான் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீதான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது. டிக்டாக் மீதான தடையை பாகிஸ்தான அரசு நீக்குவது இது நான்காவது முறையாகும்.

முன்னதாக ஒழுங்கீனமான மற்றும் அருவருக்கத்தக்க விடியோக்களை பதிவேற்றம் செய்து வெளியிட்ட புகாரின் அடிப்படையில் டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து 60 லட்சம் விடியோக்களை டிக்டாக் செயலி தனது தளத்திலிருந்து நீக்கியது. சீன நிறுவனமான டிக்டாக் செயலி பாகிஸ்தானில் 3.9 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT