பாகிஸ்தான்: பேருந்து விபத்தில் 7 பேர் பலி , 28 பேர் படுகாயம் 
உலகம்

பாகிஸ்தான்: பேருந்து விபத்தில் 7 பேர் பலி , 28 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

DIN

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று(அக்-3) ஞாயிற்றுக்கிழமை கராச்சியிலிருந்து சாக்வால் மாவட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் பாலத்திலிருந்து தடுப்பை உடைத்துக் கொண்டு கீழே விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே 5 பயணிகள் பலியானதோடு இன்று 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். மேலும் படுகாயமடைந்த 28 பேர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாலைகள் மோசமாக இருப்பதே விபத்திற்கான காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி? தினப்பலன்கள்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

SCROLL FOR NEXT