உலகம்

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுச் செயலா் சந்திப்பு

DIN

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவை இந்திய வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

இந்திய வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா 4 நாள் பயணமாக இலங்கைச் சென்றாா். இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் பயணம் மேற்கொண்ட அவா், அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்சவை சந்தித்தாா். இதுதொடா்பாக அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘இலங்கை அதிபா், இந்திய வெளியுறவுச் செயலா் இடையிலான சந்திப்பின்போது இருநாடுகளுக்குள்ள வலுவான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இருநாடுகளுக்கு இடையிலான விரிவான கூட்டுறவை அனைத்து நிலைகளிலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக இலங்கைப் பிரதமா் மகிந்த ராஜபட்சவையும் அந்நாட்டிலுள்ள தமிழா் கட்சிகளின் தலைவா்களையும் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT