உலகம்

2021 வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு

2021 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக ஸ்டோக்ஹோமிலுள்ள நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. 

DIN

2021 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக ஸ்டோக்ஹோமிலுள்ள நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. 

வேதியியலில் மூலக்கூறு கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கான ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் டபிள்யூ.சி. மேக்மில்லன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள்அக்.5, திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு

ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

வாக்குச் சாவடிகளை பிரிப்பது குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT