உலகம்

கடந்த வாரத்திலும் கரோனா பாதிப்பு குறைவு: உலக சுகாதார அமைப்பு

DIN


உலகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் கடந்த வாரமும் குறைவாகப் பதிவானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் 31 லட்சம் புதிய கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தைக் காட்டிலும் 9 சதவிகிதம் குறைவான எண்ணிக்கை. எனினும் ஏறத்தாழ முந்தைய வாரத்தைப்போலவே 54,000 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் ஆகஸ்ட் மாதம் குறையத் தொடங்கிய கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

ஐரோப்பாவைத் தவிர உலகளவில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவே உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது. ஐரோப்பாவில் அதே எண்ணிக்கைகள் தொடர்கின்றன. ஆப்பிரிக்காவில் கரோனா பாதிப்புகள் 43 சதவிகிதம் குறைந்துள்ளன. மத்தியக் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 20 சதவிகிதம் வரை கரோனா பாதிப்புகள் குறைந்துள்ளன. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய பசிபிக்கில் 12 சதவிகிதம் வரை கரோனா பாதிப்புகள் குறைந்துள்ளன. ஆப்பிரிக்காவில்தான் கரோனா பலி பெருமளவில் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT