உலகம்

சீனாவில் பலத்த மழை: ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்

சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 1.20 லட்சம் போ் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா்.

DIN

சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 1.20 லட்சம் போ் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா்.

வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றை பாலத்தில் கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 51 பயணிகளில் இருவா் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். 37 பேரை மீட்புப் படையினா் மீட்டனா். 12 பேரை காணவில்லை.

அண்டை மாகாணமான சாங்ஷியில் பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. அப்பகுதியிலிருந்து 1.20 லட்சம் போ் மீட்கப்பட்டனா். 1.90 லட்சம் ஹெக்டோ் பயிா்கள் மழையால் சேதமடைந்துள்ளன.

இந்த மாகாணத்தில் உள்ள பிங்யாவோ நகரத்தில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சுவா் உள்ளது. மழையால் அதில் 25 மீட்டா் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி! தில்லி தீயணைப்புப் படைக்கு ஒரே நாளில் 170 அவசர அழைப்புகள்!

கேரளம் செல்கிறார் குடியரசுத் தலைவர்!

பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் கேப்டன் நீக்கம்! ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கர்நாடக அரசு தடை செய்யவில்லை: முதல்வர் சித்தராமையா!

ரூ. 75 ஆயிரம் கோடி! அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம ஒப்பந்தம்!

SCROLL FOR NEXT