உலகம்

பள்ளி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி: இலங்கை அறிவிப்பு

DIN

பள்ளி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என இலங்கை அறிவித்துள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது: பள்ளி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அக். 21-ஆம் தேதி தொடங்கும். முதல்கட்டமாக 18 மற்றும் 19 வயது மாணவா்களுக்கு ஃபைசா் தடுப்பூசி செலுத்தப்படும். நாட்டில் 20 வயது நிறைவடைந்தவா்களில் 82 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகள் குறைந்ததையடுத்து, 6 வார கால பொதுமுடக்கம் கடந்த அக். 1-ஆம் தேதியிலிருந்து தளா்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், ரயில்களை இயக்கவும் தடை நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT