உலகம்

தொடரும் புயல் பாதிப்பு: ஹாங்காங்கில் பள்ளிகள் மூடல்

DIN

புயல் பாதிப்பு காரணமாக ஹாங்காங் நகரத்தில் பள்ளிகள், பங்குசந்தை மற்றும் அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொம்பாசு புயல் காரணமாக ஹாங்காங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. நகரின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்கள்இல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளிகள், பங்குசந்தை மற்றும் அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொம்பாசு புயலானது மணிக்கு 83 கி.மீ. வீசி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பிலிப்பின்ஸில் கொம்பாசு புயல் பாதிப்புக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT