ஆப்கன் குண்டுவெடிப்பு: 32 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் உள்ள ஷியா மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 32 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
உலகம்ஆப்கன் குண்டுவெடிப்பு: 32 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் உள்ள ஷியா மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 32 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் உள்ள ஷியா மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 32 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
ஆப்கனின் கந்தகார் மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவினருக்குச் சொந்தமான மசூதியில் இன்று காலை தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இதையும் படிக்க: ஏமன்: வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 40 பேர் பலி
இந்த சம்பவத்தில் 32 பேர் பலியானார்கள். 52 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காபூலில் உள்ள மசூதியில் தொழுகையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பல் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.