இந்துக்களை கொன்றவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் -வங்கதேச பிரதமர் 
உலகம்

இந்துக்களை கொன்றவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் -வங்கதேச பிரதமர்

வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு பலியான 4 இந்துக்களின் இறப்பிற்கு நீதி கிடைக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்திருக்கிறார்.

DIN

வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு பலியான 4 இந்துக்களின் இறப்பிற்கு நீதி கிடைக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்திருக்கிறார்.

வங்கதேசத்தில் நேற்று(அக்.14) நடைபெற்ற துர்கா பூஜையின் போது பல்வேறு இந்து கோயில்களில் ஏற்பட்ட வன்முறைக் கலவரத்தில் 4 இந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்துக்கள் அதிகம் இருக்கும் 22 மாவட்டங்களில் துணை ராணுவப்படையினரை நிறுத்தியும் இந்தக் கலவரம் ஏற்பட்டதால் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனங்கள் எழுந்ததால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா  , ‘ துர்கா பூஜையின் போது கலவரத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. விரைவில் தொழில்நுட்ப உதவியுடன்  பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்’என்று தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷாருக்கான் ஒரு தேசத் துரோகி! - பாஜக, இந்து அமைப்புகள் கடும் தாக்கு!

தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது- எம்.பி. ஜோதிமணி

ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு! பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்ட ரயில்!

ஹாலிவுட் நடிகையைச் சந்தித்த நதியா!

ஜன.19-ல் தஞ்சையில் திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு

SCROLL FOR NEXT