உலகம்

கரோனா பரவல்: சீன நகரில் முழு பொதுமுடக்கம்

DIN

சீனாவின் கன்சூ மாகாணத் தலைநகா் லான்ஷோவில் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, அந்த நகரில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

40 லட்சம் போ் வசிக்கும் லான்ஷோ நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29 பேருக்கு சமூகக் பரவல் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதையடுத்து, அந்த நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக நகரம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தின்போது அத்தியாவசிய காரணங்களில்லாமல் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT