ஈரான்: ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 பேர் பலி , 12 பேர் காயம்
ஈரானில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:57 AM
ஈரானில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஈரானின் தியாலா மாகாணத்தைச் சேர்ந்த அல்-ரஷத் கிராமத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 10 பேர் பலியாகியிருக்கிறார்கள் 12 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
ஈரானில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நிகழ்ந்து வருவது சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்தத் துப்பாக்கிச் சூடும் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Advertisement
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தீவிரமாகத் தேடி வருவதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.