உலகம்

ஏமன் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 85 பேர் பலி

DIN

ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24மணி நேரத்தில்  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 85 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப்  மாகாணத்தில்  எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மரீப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் பதுங்கியிருந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதில் அல்-ஜாப்வா மற்றும் அல்-கசாரா மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய போது ஹவுதி அமைப்பைச் சேர்ந்த 85 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அவர்கள் பயன்படுத்திய 9 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் தகர்க்கப்பட்டதாகவும் கூட்டுப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக கடந்த அக்.25 அன்று ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில்  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 264 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT