அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உள்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் லேக்லேண்டில் இரண்டு வீடுகளில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில், கைக்குழந்தை உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இதில் 11 வயது சிறுமி ஒருவர் பலமுறை சுடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருடன் நடைபெற்ற மோதலில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் சரணமடைந்ததாகவும் அவர் இந்தத் தவறை ஒப்புக்கொண்டதாகவும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் போலீஸார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.