உலகம்

இலங்கை பொதுமுடக்கம் செப். 21 வரை நீட்டிப்பு

DIN

கொழும்பு: இலங்கையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்துள்ள பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் வரும் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபா் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதிபா் கோத்தபய ராஜபட்ச தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதால், நாட்டில் கட்டுப்பாடுகள் விரைவில் தளா்த்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கெஹேலியா ரம்புக்வெலா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி இலங்கையில் 4,77,636 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 10,864 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT