உலகம்

இலங்கை பொதுமுடக்கம் அக்.1 வரை நீட்டிப்பு

DIN

இலங்கையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்துள்ள பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் வரும் அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபா் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதிபா் கோத்தபய ராஜபட்ச தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதால், நாட்டில் கட்டுப்பாடுகள் வரும் 21-ஆம் தேதி தளா்த்தப்படும் என்று முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி இலங்கையில் 4,98,694 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 11,817 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT