முகப்பு
உலகம்

அமைதிக்காக எந்த நாட்டுடனும் பணிபுரியத் தயார்: ஜோ பைடன்

உலகின் அமைதிக்காக எந்த நாட்டுடனும் இணைந்து பணிபுரியத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
ஜோ பைடன்
பகிர்:

உலகின் அமைதிக்காக எந்த நாட்டுடனும் இணைந்து பணிபுரியத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையில் செவ்வாய்க்கிழமை பேசிய அவர், அமெரிக்க எந்த நாட்டுடனும் பனிப்போரை வளர்க்க விரும்பவில்லை என்று சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டுக் கூறினார். 

உலகின் அமைதிக்காக எந்த நாட்டுடனும் இணைந்து அமெரிக்க பணிபுரியத் தயாராக உள்ளது. 

20 ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாத தாக்குதலின்போது இருந்த அமெரிக்கா தற்போது இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னையும், நட்பு நாடுகளையும் பாதுகாக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடும்.

வன்முறைகள், கொடுமைகள் இன்றி சிறுமிகள், பெண்கள் தங்களது உரிமைகளை பெற உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும். 

ஈரான் அணு ஆயுதங்களை பெறாமல் தடுப்பதில், அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →