உலகம்

பிரதமர் மோடி - கமலா ஹாரிஸ் இன்று சந்திப்பு

DIN

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா சென்றடைந்தார்.

அமெரிக்க அரசின் சார்பில் மூத்த அலுவலர்கள், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் மோடியை வரவேற்றனர். இதுகுறித்து மோடி ட்விட்டர் பக்கத்தில், "வாஷிங்டனில் உற்சாகமான வரவேற்பு அளித்த இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புலம்பெயர் இந்தியர்களே நமது பலம். உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் மேம்பட்டிருப்பது பாராட்டத்தக்கது" என பதிவிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பெற்றதிலிருந்து ஏழாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ள மோடி, "அமெரிக்காவுடனான வியூக ரீதியான கூட்டணி இப்பயணத்தின் மூலம் வலுப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். 

வாஷிங்டனில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்திக்கவுள்ளார். ஆப்கன் விவகாரம் அதன் தாக்கங்கள், சீனாவின் ஆதிக்கம், தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அமெரிக்க - இந்திய கூட்டணியை மேலும் விரிவுப்படுத்துவது எப்படி போன்ற வி்வகாரங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

அதற்கு முன் இன்று செப்-23 அமெரிக்க துணை அதிபரும் இந்திய வம்சாளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸையும் ஆஸ்ட்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனையும் சந்திக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT