கோப்புப்படம் 
உலகம்

காதலியை விட்டு பிரிந்த எலான் மஸ்க்; காரணத்தை கொஞ்சம் கேளுங்கள்!

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலரான எலான் மஸ்க்கின் மூன்றாண்டு காதல் வாழ்ககை முடிவுக்கு வந்துள்ளது.

DIN

உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், தனது காதலி கிரிம்ஸை விட்டு பிரிந்து வாழ்ந்துவருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதை உறுதிப்படுத்தியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், "நானும் என்னுடைய காதலியும் கிட்டத்தட்ட பிரிந்துவிட்டோம். 

ஆனால், அவருடன் நல்ல உறவே தொடர்கிறது. அவருடன் சேர்ந்து எங்களுடைய ஒரு வயது ஆண் குழந்தையை வளர்க்கவுள்ளேன். இன்னும், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து கொண்டுதான் இருக்கிறோம். எங்கள் இருவருக்கிடையே சிறப்பான உறவு இருக்கிறது. 

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களில் பணிச்சுமை நிலவுவதால் டெக்ஸாஸ் நகரில்தான் பெரும்பாலான நேரத்தை கழிக்கிறேன். வெளிநாடுகளுக்கு செல்கிறேன். என்னுடைய காதலி லாஸ் ஏஞ்சல்ஸில் வேலை செய்கிறார். தற்போது, அவர் என்னுடன் தான் வசித்துவருகிறார். எங்களின் அறைக்கு அருகே குழந்தையின் அறை உள்ளது" என்றார்.

இந்த மாத தொடக்கத்தில் மெட் காலா நிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாகக் சென்றிருந்தனர். ஆனால், சிவப்பு கம்பளத்தில் கிரிம்ஸ் தனியாகவே நடந்து சென்றார். பின்னர், நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்திற்குள்தான் இருவரும் சேர்ந்தனர். 

அதேபோல், கடந்த வாரம் இறுதியில், கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரினின் மனைவி நிக்கோல் ஷனஹான் நடத்திய விருந்தில் மஸ்க் தனியாக கலந்து கொண்டார்.

மஸ்க், கிரிம்ஸி ஆகியோர் டேட்டிங் செய்வதாக கடந்த 2018ஆம் ஆண்டு, மே மாதம், முதல்முறையாக செய்தி வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT